என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஊசி பயன்படுத்த தடை
நீங்கள் தேடியது "ஊசி பயன்படுத்த தடை"
ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தடை செய்யப்பட்ட மருந்து மற்றும் ஊசிகளை பயன்படுத்தக்கூடாது என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. #IndianAsianGames #NoNeedlePolicy #OlympicCouncil
புதுடெல்லி:
ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில், நமது நாட்டில் உள்ள அனைத்து தேசிய விளையாட்டு சம்மேளனங்களும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அதில், ‘வீரர்கள் தனிப்பட்ட முறையில் ஊசிகளை வைக்கவோ, பயன்படுத்தவோ கூடாது என்ற ஒலிம்பிக் கமிட்டியின் விதிமுறையை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ‘ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தடை செய்யப்பட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ள மருந்துகளை எக்காரணத்தை கொண்டும் வீரர்கள் யாரும் எடுத்து கொள்ளக்கூடாது. இந்த விஷயத்தில் தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் நிர்வாகிகள் கவனம் செலுத்தி நாட்டுக்கு தர்மசங்கடம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
உடல் நலக்குறைவு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்து மற்றும் ஊசி தேவையெனில், விளையாட்டு கிராமத்தில் உள்ள இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகத்தில் வைத்துக்கொள்ளலாம். அதனை உரிய முன் அனுமதி பெற்று பயன்படுத்தலாம்’ என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊசி மூலம் ஊக்க மருந்து பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால், அதனை யாரும் விதிமுறைக்கு புறம்பாக பயன்படுத்துவதை தடுக்க ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்துள்ளது. #IndianAsianGames #NoNeedlePolicy #OlympicCouncil

×

X